Advertisement
ஜெய்ப்பூர் : சர்வதேச
புகைப்படத்துறையில் சிறந்த புகைப்படக்கலைஞர் என்று பெயர் எடுத்துள்ள இஸ்ரேலை சேர்ந்த ஷெபி பெர்ஜர்சன், ஆப்பிள் ஐபோன் 6எஸ் பிளஸ்சின் உதவியுடனேயே இந்திய திருமண போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, ஷெபி பெர்ஜர்சன் கூறியதாவது, போட்டோ எடுக்க, ஆப்பிள் ஐபோனில் எத்தகைய சிறப்பம்சத்தையும் மேற்கொள்ளவில்லை. இசைக்கலைஞர் எவ்வாறு தனது ஒரே இசைக்கருவியின் மூலமே, பல்வேறு இசைகளை உருவாக்குகிறாரோ, அதுபோல தான் நானும், ஐபோன் உதவியுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளேன். இதில் வியப்பு ஏதுமில்லை.
நான் ஐபோன் உதவியுடன் போட்டோக்களை எடுத்ததோடு மட்டுமல்லாது, தயாரிப்புக்கு பிந்தைய பணிகளையும் ஐபோனிலேயே மேற்கொண்டதாக பெர்ஜர்சன் கூறியுள்ளார்.
கேமரா வசதி கொண்ட போன் புழக்கத்தில் வந்த நிலையில், போன் வைத்துள்ள அனைவரும் புகைப்பட கலைஞராக மாறியுள்ளனர். ஸ்மார்ட்போனால், வாட்ச்கள், அலாரம், டைரி எழுதுதல் உள்ளிட்டவைகள் மறைந்து மற்றும் மறந்துள்ள நிலையில், புகைப்படத்துறையிலும், ஸ்மார்ட்போன்களின் வரவு, அத்துறையை சார்ந்தவர்களை சிறு அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

Post a Comment