தமிழ்த் திரையுலகத்தில் பெரிய இயக்குனர்கள் இயக்கத்தில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் எத்தனை கோடியில் தயாரிக்கப்பட்டாலும் அதன் பட்ஜெட்டை 100 கோடி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த ஆண்டு படங்களின் வசூல் 100 கோடியை எட்டி விட்டதா என்று தான் பேச ஆரம்பித்தார்கள். இந்த 2016ல் படத்தின் பட்ஜெட்டையே 100 கோடிக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க மகேஷ்பாபு நாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ள புதிய படத்தின் பட்ஜெட்டை 100 கோடி என தீர்மானித்திருக்கிறார்களாம். ஒரு நேரடித் தமிழ்ப் படத்தில் மகேஷ்பாபு நடிப்பது இதுவே முதல் முறை. 'பிரம்மோற்சவம்' படம் மகேஷ்பாபுவின் முதல் நேரடித் தமிழ்ப் படம் என்று சொன்னாலும், படத்தை தெலுங்கில்தான் படமாக்கி வருகிறார்களாம்.
நீண்ட நாட்களாவே தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருந்து வரும் மகேஷ் பாபு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதைப் பெருமையாகக் கருதுகிறாராம். வரும் ஏப்ரல் மாதம் முதல் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.
Wow
ReplyDeleteWow
ReplyDelete