காலம் முன்னேறிக்கொண்டு செல்ல செல்ல நாமும் எமது ஸ்மார்ட் போன்களை புதிய மாடல் மற்றும் அதிக வசதி கொண்டதாக மாற்றிக்கொண்டே இருக்கிறோம். ஆகவே அது சம்மந்தமானது தான் இன்றைய பதிவு.


அதாவது நாம் உபயோகித்து கொண்டு இருக்கும் ஸ்மார்ட் போனை விற்று விட்டோ அல்லது குறித்த ஸ்மார்ட் போன் இருக்கும் போதே இன்னொரு புதிய ஸ்மார்ட் போனிற்கு மாறுவது சாதாரண விடயம். ஆனால் புதியதொரு ஸ்மார்ட் போனிற்கு மாறும் போது அனைவருமே எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை தான், தமது பழைய ஸ்மார்ட் போனில் இருக்கும் டேட்டாகளை புதிய ஸ்மார்ட் போனிற்கு மாற்றிக்கொள்வது.


உங்களது அனைத்து பைல்களுமே மெமரி கார்டு-இல் இருக்குமேயானால், குறித்த மெமரி கார்டு-ஐ புதிய ஸ்மார்ட் போனிற்கு மாற்றிக்கொள்வதன் மூலம் உங்களுடைய பழைய போனில் உள்ள போடோஸ் மற்றும் வீடியோகளை பரிமாற்றிக்கொள்ள முடியும்.



ஆனால் பழைய போனில் இருக்கும் குறுஞ்செய்திகள், மற்றைய செயலிகள், ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி இலக்கங்கள், செயலிகள் மற்றும் உங்களது பழைய போனில் இருக்கும் ஏனைய டேட்டாகளை புதிய போனிற்கு மாற்றிக்கொள்வது சிரமமான காரியம் ஆகும்.


ஆகவே இன்றைய பதிவில் உங்களது பழைய ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களையும் நீங்கள் வாங்கிய புதிய ஸ்மார்ட் போனிற்கு மிக இலகுவாக எப்படி மாற்றிக்கொள்வது என்று பார்ப்போம்.

முதலாவதாக உங்களது உங்களது புதிய போனில் Settings-இற்கு சென்று Security என்பதில் Unknown Sources என்பதை On செய்யுங்கள்.


அடுத்து Settings-இல் இருக்கும் Accessibility என்பதில் Auto Install என்பதையும் On செய்யுங்கள்.



அதன் பின்னர் டேட்டாக்களை மிக இலகுவாக பழைய போனில் இருந்து புதிய போனிற்கு மாற்ற உதவும் கீழ் குறிப்பிட்டுள்ள அன்றொஇட் போனிட்கான சிறப்பு செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கிய செயலியை உங்களது இரண்டு அன்றொஇட் போனிலும் நிறுவிக்கொள்ளுங்கள்.

அதன் பின்னர் குறித்த செயலியை இரண்டு போன்களிலும் ஆரம்பித்து உங்களது பழைய போனில் Sender என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

அதே போல் உங்களது புதிய போனில் இந்த செயலியில் இருக்கும் Receiver என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது இரண்டு போன்களும் ஒன்றுடன் ஒன்று டேட்டாகளை பரிமாறிக்கொள்ள தயாராகும்.

சிறிது நேரத்தில் இரண்டு போன்களையும் இணைத்து கொள்வதற்கான வசதி கிடைக்கப்பெறும்.

அதிலே காணப்படும் Connect என்பதை கிளிக் செய்து இரண்டு போன்களையும் தகவல்களை பரிமாறிக்கொள்ள தயார் படுத்தலாம்.



இரண்டு போன்களும் இணைந்த பின்னர், உங்களது புதிய போனில் கீழ்காட்டியுள்ளவாறு திரை ஒன்று தோன்றும். அதிலே உங்களது பழைய போனில் இருந்து எதையெல்லாம் புதிய போனிற்கு மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களோ அவற்றை தெரிவு செய்து கொள்ள முடியும்.



உங்களுக்கு தேவையானவற்றை தெரிவு செய்த பின்னர், Start என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான். இப்போது உங்களது பழைய போனில் இருக்கும் அனைத்து டேட்டாகளும் புதிய போனிற்கு Copy செய்யப்படும்.

இந்த அருமையான அன்றொஇட் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.

அன்றொஇட் சிறப்பு செயலி

Please Share your friends and Like & Share our Facebook Like Page..... Thank you.. 

Post a Comment

 
Top