புதுடில்லி: அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்காத மற்றும் புகாருக்கு ஆளாகும் அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்வது, ஓய்வூதியத்தை நிறுத்துவது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்க, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரிகள் இடையே புதிய பயத்தை ஏற்படுத்து உள்ளது.
அமைச்சர்களுடன் ஆய்வுபிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், மத்திய அரசு துறைச் செயலர்கள், மாநிலத் தலைமைச் செயலர்களுடன், ஒன்பதாவது முறையாக ஆலோசனை நடத்தினார் மோடி. அப்போது, மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் மீது அதிக அளவு புகார்கள் வருவது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய
மோடி, அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்காத, புகாருக்கு ஆளாகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

'பொதுமக்களுடன் அதிக அளவில் நேரடி தொடர்புள்ள துறைகளில், பொதுமக்களின்புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும்; அவற்றை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்' என்றும் மோடி உத்தரவிட்டார். 

இந்த சந்திப்பின்போது, சாலை, ரயில் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து துறைச் செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார் மோடி.

ஆலோசனை:அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.மத்திய அரசின் திட்டங்களின் தற்போதைய நிலை, அவற்றை விரைவாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் குறித்து, இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மோடியின் இந்தஅதிரடி உத்தரவுகளால், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் இடையே புதிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


என்னென்ன உத்தரவுகள்?* புகாருக்கு ஆளாகும், பிரச்னைக்குரிய அதிகாரிகளை, துறைச் செயலர்கள் கண்காணித்து, அவர்களுடைய செயல்பாடுகள் குறித்த அறிக்கையை தர வேண்டும்* இது போன்ற அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது, ஓய்வூதியத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கையை எடுக்கலாம்* அனைத்து துறைகளிலும், பொதுமக்களின் புகார் கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகளை சுலபமாக்க வேண்டும்* முக்கியமான பிரச்னைகளில், துறை செயலர்களே நடவடிக்கை எடுக்கலாம். கோப்புகளை அனுப்பும், 'அரசு வேலை' இனி தொடரக் கூடாது.

Post a Comment

 
Top